பாபிலோன் சிறையிருப்பிலிருந்து எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டும் வரை
பாபிலோன் சிறையிருப்பின்போது இஸ்ரவேலருக்கு
பல சோதனைகள் உண்டாகின்றன; அவை அவர்களுடைய விசுவாசத்தைப் பரீட்சித்துப்
பார்க்கின்றன. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அக்கினிச் சூளைக்குள்
எறியப்பட்டார்கள், ஆனால் அவர்களைக் கடவுள் உயிருடன் வெளியே கொண்டு வந்தார்.
பிற்பாடு மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றிய பின்பு, தானியேல்
சிங்கங்களின் கெபிக்குள் போடப்பட்டார். ஆனால் கடவுள் அந்தச் சிங்கங்களின்
வாயைக் கட்டிப்போட்டு அவரையும் பாதுகாத்தார்.
கடைசியில், பெர்சிய
ராஜாவான கோரேசு இஸ்ரவேலரை விடுதலை செய்தார். கைதிகளாக பாபிலோனுக்குக்
கொண்டு போகப்பட்டு சரியாக 70 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தங்களுடைய சொந்த
தேசத்திற்கே திரும்பி வந்தார்கள். எருசலேமுக்குத் திரும்பி வந்ததும்
முதலில் யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட தொடங்கினார்கள். ஆனால், சீக்கிரத்திலேயே
அவர்களுடைய எதிரிகள் அந்த வேலையை நிறுத்திப் போட்டார்கள். எனவே, ஏறக்குறைய
22 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஒருவழியாக அந்த ஆலயத்தை அவர்கள் கட்டி
முடித்தார்கள்.
அடுத்து, ஆலயத்தை அழகுபடுத்த எஸ்றா எருசலேமுக்குத்
திரும்பி வருவதைப் பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். ஆலயத்தைக் கட்டி
முடித்து ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வந்தார். அவர் வந்து 13
ஆண்டுகளுக்குப் பின்னர் நெகேமியா வந்தார். உடைந்து கிடந்த எருசலேமின்
மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு அவர் உதவி செய்தார். ஆக, பகுதி ஐந்தில்
152 ஆண்டுகளின் சரித்திரம் அடங்கியிருக்கிறது.
![]() |
எஸ்றாவும் மக்களும் ஜெபம் செய்துகொண்டிருக்கிறார்கள் |
No comments:
Post a Comment