இயேசுவின் உயிர்த்தெழுதல் முதல் பவுலின் சிறையிருப்பு வரை
இயேசு மரணமடைந்து மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுப்பப்பட்டார். தம் சீஷர்களுக்கு அன்று ஐந்து முறை வெவ்வேறு
சமயங்களில் அவர் காட்சியளித்தார். தொடர்ந்து 40 நாட்களுக்கு அவர்கள் முன்
தோன்றினார். பிறகு, அவரது சீஷர்களில் சிலர் பார்த்துக் கொண்டிருக்கையில்,
இயேசு பரலோகத்திற்கு எழும்பிச் சென்றார். பத்து நாட்களுக்குப் பின்,
எருசலேமிலிருந்த இயேசுவின் சீஷர்கள் மீது கடவுள் தமது பரிசுத்த ஆவியை
ஊற்றினார்.
பிற்பாடு, கடவுளுடைய எதிரிகள் அப்போஸ்தலர்களைச்
சிறையில் தள்ளினார்கள். ஆனால் ஒரு தேவதூதன் அவர்களை விடுவித்தார். ஸ்தேவான்
என்ற சீஷன் எதிரிகளால் கல்லெறிந்து கொல்லப்பட்டார். ஆனால் இந்த எதிரிகளில்
ஒருவரைத் தம்முடைய விசேஷ ஊழியனாக இருக்கும்படி இயேசு எப்படித்
தெரிந்தெடுத்தார் என்பதை நாம் பார்க்கப் போகிறோம், அவர்தான் பின்னர்
அப்போஸ்தலன் பவுல் ஆகிறார். பிறகு, இயேசுவின் மரணத்திற்கு மூன்றரை ஆண்டுகள்
கழித்து, புறஜாதியைச் சேர்ந்த கொர்நெலியுவுக்கும் அவருடைய வீட்டாருக்கும்
பிரசங்கிப்பதற்கு அப்போஸ்தலன் பேதுருவை கடவுள் அனுப்பினார்.
ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பின், பவுல் தனது முதல் ஊழிய பயணத்தைத்
தொடங்கினார். இரண்டாம் பயணத்தின்போது தீமோத்தேயு அவருடன் சென்றார்.
கடவுளுடைய சேவையில் பவுலுக்கும் அவருடைய பயணத் தோழர்களுக்கும்
மெய்சிலிர்ப்பூட்டும் அநேக அனுபவங்கள் எப்படிக் கிடைத்ததென்று நாம்
வாசிக்கப் போகிறோம். கடைசியாக, பவுல் ரோம சிறைச்சாலையில் வைக்கப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார், ஆனால் மறுபடியும்
சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஏறக்குறைய 32 ஆண்டுகளில் நடந்த
சம்பவங்களைப் பகுதி 7-ல் நாம் பார்ப்போம்.
![]() |
வெளிச்சத்தால் சவுலின் கண்கள் குருடாயின |
No comments:
Post a Comment